2025 ஜூலை 16, புதன்கிழமை

பருப்பும் டின்மீனும் பழைய விலையில் விற்பனை

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருப்பு, டின்மீன்களை, சாதாரண விலையில் விற்பனை செய்யவுள்ளதாக, சில்லறை வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

மார்ச் மாதம் நுகர்வோர் விவகார அதிகாரசபையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில், பருப்புக்கும் டின்மீனுக்கும் அதிகபட்ச சில்லறை விலையைக் குறிப்பிட்டிருந்தது.

இதன்பிரகாரம், மைசூர் பருப்பின் ஒரு கிலோகிராமின் 65 ரூபாயாகவும் 425 கிராம் டின்மீனின் விலை 100 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கடந்த வாரம் அதிகபட்ச சில்லறை விலையை நீக்கிவிட்டு, பருப்பு மற்றும் டின்மீனை, செதொர மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு, அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, பருப்பு மற்றும் டின்மீனை, சாதாரண விலையில் விற்பனை செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாக, சில்லறை வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

அந்த வகையில், இன்று (15) அமலுக்கு வரும் வகையில், பருப்பு ஒரு கிலோகிராம் 134 ரூபாய்க்கும் 425 கிராம் டின்மீன் 192 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .