2025 ஒக்டோபர் 08, புதன்கிழமை

புலிகளின் ஆதரவாளர்களை மகிழ்விக்கப் போகிறீர்களா?

Editorial   / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் வாய்மூலம் எதிர்ப்பு தெரிவித்த போதும் வாக்கெடுப்பைக் கோரவில்லை. வாக்கெடுப்பைக் கோருவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லையா? நாடுகள் பல இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. எனினும், டயஸ்போராக்களையா? விடுதலைப் புலி ஆதரவாளர்களையா? மகிழ்விக்கப் போகின்றீர்கள் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கேள்​வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) அன்று நடைபெற்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் 2025ஆம் ஆண்டின் குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த விவாதத்தில் நாமல் ராஜபக்‌ஷ மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் அதிவேக வீதி கட்டமைப்பை அமைக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளது. அதிவேக வீதியை அமைத்தால் நாய்கள், விலங்குகளுக்கு வீதியைக் கடக்க முடியாத நிலைமை ஏற்படும் என்றே அன்று கூறினீர்கள். இந்த வீதிகள் தங்கத்திலா நிர்மாணிக்கப்படுகின்றது என்றும் கேட்டீர்கள். ஆனால் இப்போது உங்களின் தலைவர் எஞ்சியுள்ள அதிவேக வீதியை அமைக்க நடவடிக்கை எடுக்கின்றார். அன்று நீங்கள் தடைகளை ஏற்படுத்தியிருக்காவிட்டால் இப்போது ஜனாதிபதிக்கு அதிவேக வீதிகளைத் திறந்து வைத்திருக்கவும் முடியும்.

இதேவேளை, இப்போது பொலிஸ் ஆணைக்குழு தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளன. அன்று பொலிஸ் ஆணைக்குழு வேண்டும். அது சுயாதீனமாக இருக்க வேண்டும் என்று கூறிய நீங்கள் இப்போது சுயாதீனத்துத்தை நீக்கி அதன் அதிகாரத்தை பொலிஸ்மா அதிபருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கின்றீர்கள்.

இப்போது மிருகக்காட்சி சாலையிலும் விலங்குகள் திருடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நீங்கள் கடற்படைத் தளபதியை கைது செய்துள்ளீர்கள். விடுதலைப் புலி புலனாய்வில் இருந்த ஒருவர் வழங்கிய சாட்சிக்கமைய கைது செய்துள்ளீர்கள். சிஐடிக்கு ஏற்றவாறு வாக்குமூலங்கள் பதியப்படுகின்றன.

இவ்வாறான நிலைமையிலேயே பொலிஸ் ஆணைக்குழுவை நீக்கி பொலிஸ்மா அதிபரின் கீழ் அதிகாரங்களைக் கொண்டுவந்து அரசாங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கப்படுகின்றது. பொலிஸ்மா அதிபர் சில விடயங்களை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது கடந்த காலங்களில் அரசாங்கத்திற்காக கடைக்குச் சென்ற பொலிஸ்மா அதிபர்களுக்கு என்ன நடந்தது என்று சிந்திக்க வேண்டும். பொலிஸாரை பயன்படுத்தி தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X