Freelancer / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள பாலங்களை மீள கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்க இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Wiebe de Boer மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
சமீபத்திய அனர்த்தத்திலிருந்து இலங்கை மீண்டுவர ஆரம்பித்திருக்கும் இந்த சவாலான காலப்பகுதியில் இருநாடுகளின் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அனர்த்த பாதிப்புகளை குறைத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் எதிர்கால ஒத்துழைப்பிற்கான வழிகள் குறித்து பிரதமரும் தூதுவரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர் என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (a)

13 minute ago
28 minute ago
35 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago
35 minute ago
45 minute ago