2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

மகா சங்கத்தினரின் ஆதரவைவும் அவசியம்: ஜனாதிபதி

R.Tharaniya   / 2025 நவம்பர் 03 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக தொடர்பு இருப்பதாகவும், சமூகத்தை மீட்டெடுக்க  பிக்குமாரின் பங்களிப்பு இந்த சமூகத்திற்கு மீண்டும்  அவசியம் என்றும் தெரிவித்துள்ள  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எதிர்கால தலைமுறையை  போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற மகா சங்கத்தினர் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்

களனி வித்யாலங்கார சர்வதேச பௌத்த  மாநாட்டு மண்டபத்தில் நேற்று (02) பிற்பகல் நடைபெற்ற 'யெலசிய அபிமன்' நினைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

1875 நவம்பர் 1ஆம் திகதி போதிசத்வ  குணோபேத ரத்மலானே ஸ்ரீ தர்மாலோக மகா சுவாமிந்திர தேரினால் நிறுவப்பட்ட பேலியகொட வித்யாலங்கார பிரிவேனா, சமகால பௌத்த கல்வியின் தலைமையகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பேலியகொட வித்யாலங்கார பிரிவேனா நிறுவப்பட்டு இந்த ஆண்டு 150 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்த நீண்ட வரலாற்றில் வித்யாலங்கார பிரிவேனா நாடு, தேசம், மதம், தர்மம் மற்றும் மொழிக்கு ஆற்றிய சேவை மகத்தானது. சிங்களம், பாலி, சமஸ்கிருதம் மற்றும் பௌத்த தர்மம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி  பட்டப்படிப்பை நோக்காகக் கொண்டு பிக்குகளுக்குத் தேவையான கல்வியை இந்த நிறுவனம் வழங்கி வந்தது. சமகாலத்திற்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆங்கில மொழி அறிவு என்பனவும் வழங்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X