Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 27 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் பல இடங்களிலும் ஏற்பட்ட படைப்புலுத் தாக்கத்தால், பழச்செய்கை பாதிக்கப்படவில்லை என, ஹொரண பழச்செய்கை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
படைப்புலுவின் தாக்கம் அதிகரித்ததையடுத்து, பழச்செய்கைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகயைடுத்தே, இது உறுதி செய்யப்பட்டதாகவும் எனினும், இது தொடர்பாக அனைத்துப் பகுதிகளிலும் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நாட்டில் எந்தவொரு பகுதியிலும் பழச்செய்கைகளுக்குத் தாக்கம் ஏற்பட்டிருந்தால், 1920 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது 034 2261323 எனும் நிறுவனத்தின் தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என, பழச்செய்கையாளர்கள் கோரப்பட்டுள்ளனர்.
இதேவேளை, படைப்புலுவினால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதன்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
06 Jul 2025