Editorial / 2025 டிசெம்பர் 19 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பு வியாழக்கிழமை (18) இரவு 10.15 மணி அளவில் ஆரம்பமாகி சுமார் 40 நிமிட நேரம் இடம்பெற்றது.
இதன்போது ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிராகரிப்பு,தமிழர் தேசம் இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படல் வேண்டும்,
ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன.
முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்துகொண்டிருந்தார்.
தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொ.ஐங்கரநேசன் (தலைவர் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்), செ.கஜேந்திரன் (செயலாளர் ததேமமு), த.சுரேஷ் (தேசிய அமைப்பாளர்), க.சுகாஸ் (சிரேஸ்ட சட்டத்தரணி), ந.காண்டீபன் (சிரேஷ்ட சட்டத்தரணி) கலந்து கொண்டனர்
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025