Janu / 2026 மார்ச் 11 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை சீதுவை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
திங்கட்கிழமை (09) மாலை முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் போது 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் விடுதியை நிர்வகித்த குற்றச்சாட்டில் 23 வயதுடைய இளைஞன் ஒருவரும், அங்கு தங்கியிருந்த 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட 6 பெண்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் கடுவலை, கம்பஹா, நீர்கொழும்பு, பதலங்கல மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சீதுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago