Editorial / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 2 ரூபாயால் அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அதனையடுத்து, பழைய விலையிலேயே பாணை விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலையை குறைப்பதற்கு அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை அடுத்து பாணின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை, இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
450 கிராம் நிறையுடைய பாணின் விலையை கடந்த 6ஆம் திகதி இரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago