2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பஸ் விபத்தில் 9 பேர் காயம்

Kanagaraj   / 2015 நவம்பர் 09 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டனிலிருந்து மஹரகம நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும், கொழும்பிலிருந்து ஹட்டனை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்தவர்களில் ஒன்பது பேரே இவ்வாறு காயமடைந்து வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து ஸ்டெதன், வுட்லண்ட் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

மிகவேகமாக பயணித்த தனியார் பஸ்ஸே, எதிர்திசையிலிருந்து முன்னோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் மோதியுள்ளதாக ஆரம்பக்கட்டவிசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X