Editorial / 2024 செப்டெம்பர் 20 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வௌ்ளிக்கிழமை (20) வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளானதில் 17 பயணிகள் காயமடைந்துள்ளனர் என மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
எதிரே வந்த காருக்கு இடம்கொடுப்பதற்கு முயற்சித்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஸ்ஸின் மீது மோதிய கார், அவ்விட்டத்தில் நிற்காமல் வேகமாக பயணித்துவிட்டது. விபத்தில் காயமடைந்த ஏழு பயணிகள் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையிலும், பத்து பயணிகள் புத்தல பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமணசிறி குணதிலக்க



2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago