2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பாடசாலை மாணவன் கொலை தொடர்பில் முக்கிய சான்று கண்டுபிடிப்பு

Editorial   / 2018 நவம்பர் 25 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை – எலவில்ல வீதியில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கத்தி குத்து சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்களாக தேடப்பட்டு வரும் மூன்று மாணவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை நகருக்கு அருகில் குறித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த சம்பவத்தில் கத்து குத்துக்கு இலக்காகி உயிரிழந்த மாணவனது பிரேத பரிசோதனைகள் இன்று (25) மாத்தறை வைத்தியசாலையில் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .