2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் கலந்துரையாடல் ஒன்று இன்று (25) நடைபெறவுள்ளது.

இதன்போது, பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

200 இற்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளில், மாணவர்களை வழமை போன்று உள்வாங்க முடியுமா என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

செப்டெம்பர் முதலாம் திகதி தொடக்கம் பாடசாலைகளில் காலை 7.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை அனைத்து மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தும் இன்று ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X