Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 17 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
தொற்று நோயியல் நிபுணர்கள், விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைப்பெற்று பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பான முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, மே மாதம் 11 ஆம் திகதி நாட் டில் உள்ள பாடசாலைகள் யாவும் கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அறிவிக்கப்பட்டது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 238 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் மே மாதம் முதல் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்க்கமான நாட்களாக இருக்கும் என அறிவித்துள்ளது.
எனவே பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அவசரப்படத் தேவையில்லை. இந்த முடிவு தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதே, சங்கத்தின் நிலைப்பாடாகும் என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago