Editorial / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புளை பகுதியைச் சேர்ந்த பாடசாலையொன்றில் 9 ஆம் தரத்தில் கல்விபயிலும் மாணவன், பாடசாலை மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் திடீர் சுகயீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கீழே விழுந்த நிலையில், மாணவர்களால் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், தம்புளை வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று (12) மதியம் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
தம்புளை, பெல்வெஹர பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் பிறந்ததில் இருந்து இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தம்புளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago