2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பாணந்துறையில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு

Freelancer   / 2025 ஜூலை 11 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அடையாளம் தெரியாத நபர் குறித்த பகுதியிலுள்ள வீட்டின் ஜன்னலை உடைத்து அவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள்  தெரியவரவில்லை. 

சந்தேக நபர்களைக் கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குடு சலிந்துவிற்கும் நிலங்கவிற்கும் இடையிலான மோதலில் குடு சலிந்துவின் தரப்பில் ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .