2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பாதணிகளுக்குள் மறைத்து வைத்தே மிளகாய் தூள் கொண்டுவரப்பட்டுள்ளது

Editorial   / 2019 ஜனவரி 28 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்துக்குள் மிளகாய்தூள் கொண்டுவரப்பட்டமை தொடர்பிலான விவரம், சபாநாயகரால் நியமிக்கப்பட்டிருந்த குழுவின் அறிக்கையிலிருந்து அம்பலமாகியுள்ளது.  

அந்த மிளகாய்த்தூளை உறுப்பினர்கள் இருவர், தங்களுடைய பாதணிகளுக்குள் மறைத்துவைத்தே, சபைக்குள் கொண்டுவந்துள்ளனரென, அந்த விசாரணை அறிக்கையில் சபைக்குள் நவம்பர் 14ஆம், 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை குழப்பகரமான நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்த பிரதி சபாநாயகர் ஆனந்த குமாசிறி தலைமையிலான குழு, கடந்த 22ஆம் திகதியன்று கையளித்துள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அந்த மூன்று நாள்களும், சபைக்குள் குழப்பங்களை விளைவித்தனர், என்றக் குற்றச்சாட்டின் பேரில் 59 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மிளக்காய்தூள் வீசித்தாக்குதல் நடத்தியமை, நாள்காலியை உடைத்தல், ஒலிவாங்கியை முறித்தமை, அக்கிராசனத்தின் மீது தண்ணீர் ஊற்றியமை, கத்தியைக் காண்பித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளே, இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .