2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

“பாதாள உலகுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார்?”

S.Renuka   / 2025 மே 28 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர் பட்டியல்கள் எதிர்காலத்தில் அவர்களின் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு வழங்கப்படும் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது,  பிரதி பொலிஸ் மா அதிபர் இவ்வாறு கூறினார்.

சில கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பாதாள உலகத்துடன் தொடர்புகளில் ஈடுபட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X