2025 ஜூலை 16, புதன்கிழமை

பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் பணியாளர்களுக்கு நிவாரணம்

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி வருவதையடுத்து, வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள புலம்பெயர் பணியாளர்கள் தொடர்பில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைவாக 16 வெளிநாட்டுத் தூதுக்குழுக்களில்,  தொழிலாளர் சேமநலப் பிரிவு மற்றும் நேரடியாகத் தொடர்புபட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தவினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக 16 வெளிநாட்டுத் தூதுக்குழுகள் தொழிலாளர் சேம நலப்பிரிவிடம் தற்பொழுது பணியகத்தில் தொழிலாளர் சேமநல நிதியத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பேர் பணியாளர்களுக்கு தேவையான வசதிகள் துரிதமாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த 16 வெளிநாட்டுத் தூதுக்குழுகள் அமைந்துள்ள  தொழிலாளர் சேமநலப் பிரிவுகளுக்கிடையில் அபுடாபி, பஹ்ரேன், சைபிரஸ், டுபாய், இஸ்ரேல், ஜோர்தான், குவைட், லெபனான் ஆகிய நாடுகளுக்குட்பட்டதாகும். இதேபோன்று மலேசியா, ஓமான், மாலைதீவு, கட்டார், ரியாத், தென்கொரியா மற்றும் சிங்கப்பூரும் இவற்றுக்கு உட்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் 24/7 செயல்படும் 1989 என்ற உடனடி தொலைபேசி ஊடாக, வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், இதன்மூலம் பெறப்படும் தகவல்களுக்கு அமைவாக, பணியாளர்கள் உள்ள நாடுகளின் தூதரகங்களில் தொழிலாளர் சேமநலப் பிரிவுக்கு சமர்ப்பித்து, தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .