2025 ஜூலை 05, சனிக்கிழமை

பாம்பன் ரயில் பாலத்தை திறந்துவைத்தார் மோடி

Freelancer   / 2025 ஏப்ரல் 07 , மு.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பாம்பன் - மண்டபம் இடையே 550 கோடி ரூபா மதிப்பில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

இந்தியாவுடன் இராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் மண்டபம் கடற்கரையிலிருந்து, பாம்பன் கடற்கரை வரையிலும் கடலில் ரயில் பாலமும் அதன் நடுவே கப்பல் கடந்து செல்ல தூக்குப் பாலம் ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு 1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதுவே இந்தியாவில் கட்டப்பட்ட முதல் நீளமான கடல் பாலம் ஆகும்.

ராமநவமி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணியளவில் இலங்கை பயணத்தை நிறைவு செய்து விட்டு மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி 550 கோடி ரூபாசெலவில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தை கொடி அசைத்து வைத்து திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மண்டபத்திலிருந்து புறப்பட்டு வந்த சிறப்பு ரயில் இராமேஸ்வரத்துக்கு சென்றார்.

பின்னர் ரிமோட் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து பாலத்தை மேலே உயர்த்தி கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் பாம்பன் பாலங்களை கடந்து செல்வதையும், பாலத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .