2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பாலியல் இலஞ்சம்: 2 பேருக்கு விளக்கமறியல்

Freelancer   / 2022 செப்டெம்பர் 07 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச வேலை பெற்றுத் தருவதாக் கூறி, பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கோரிய இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷண கெகுணவெல, இன்று (07) உத்தரவிட்டார்.

அரசியற் கட்சியொன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட இருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த பெண்ணை 50 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வருமாறு அறிவிக்கப்பட்டதாக ஆணைக்குழுவில் அந்தப் பெண் முறைப்பாடு அளித்துள்ளார்.

புறக்கோட்டையிலுள்ள உணவகம் ஒன்றில் வைத்து பணத்தைப் பெற முயன்றபோது, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு மன்றுக்கு அறிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .