Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2022 நவம்பர் 06 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘பால்’ மாற்றிய தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனதுக்குப் பிறந்த பெண் சிசுவுக்கு பதிலாக ஆண் சிசுவை மாற்றி எடுத்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய, தாயொருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் போதனை வைத்தியசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அந்தத் தாய், பதவியவைச் சேர்ந்த 32 வயதானவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட தாயும், கலன் பிந்துனுவைச் சேர்ந்த 42 வயதான தாயும் ஒரேநாளில் சிசுக்களைப் பிரசவித்துள்ளனர்.
பிரசவத்துக்குப் பின்னர் இரண்டு சிசுகளும் சூடான இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தனக்குப் பிறந்த ஆண் குழந்தையை, பதவியைச் சேர்ந்த தாய் மாற்றிக்கொண்டார் என கலன் பிந்துனுவைச் சேர்ந்த தாய் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்ட தாய், 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். வழக்கு 2023 மே மாதம் 22 ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரி டப்ளியு பஸ்நாயக்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
54 minute ago
3 hours ago
3 hours ago