R.Maheshwary / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லேரியா ஆரம்ப வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள பிசிஆர் இயந்திரத்துக்கு தேவையான இரசாயன பதார்த்தம் இண்மையால், இதன் பரிசோதனை நடவடிக்கைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதென, குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அந்த இயந்திரத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நாளொன்றுக்கு 1,000 பிசிஆர் பரிசோதனைகளை செய்யும் வாய்ப்பு காணப்பட்ட போதிலும் தற்போது 1,000க்கும் குறைவான பரிசோதனைகளே முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பிசிஆர் இயந்திரத்துக்கான இரசாயனப் பதார்த்தத்துக்கான கோரிக்கை விடுத்து பல நாள்கள் ஆகியும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது சுகாதார அமைச்சின் தலையீட்டுடனேயே இந்த இரசாயன பதார்த்தத்தை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வர முடியும் என்றும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago