Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 30 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி முதல், தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, நீதிச் சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு - கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க, நேற்று (29) அறிவித்தார்.
அந்த வகையில், இந்த வழக்கானது, டிசெம்பர் 4ஆம் திகதி முதல், கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, மேற்படி ஆணைக்குழு தீர்மானித்துள்ளதென, கோட்டை நீதவான் அறிவித்தார்.
இது தொடர்பான வழக்கு, நேற்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதம் குறித்து மன்றில் அறிவித்த நீதவான், இந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, 4ஆம் திகதின்று, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு, நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், பிணைமுறி வழக்கின் சந்தேகநபர்களான, பர்பெஷுவல் ட்ரஸரிஸ்ட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரையும், அன்றைய தினம் வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும், நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago