Nirosh / 2021 மார்ச் 07 , பி.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ரக்பி வீரரை, கண்டி பொலிஸார் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் குற்றச்சாட்டுத் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த நெரிசல்களைக் குறைப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் அம்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சிறைச்சாலைகளில் உள்ள போதைப்பொருள் வர்த்தகர்களிடமிருந்து அவர் போதைப்பொருளைப் பெற்றிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026