Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்துகொண்ட ரவி கருணாநாயக்க, ஆளும் பக்கத்தின் பின்வரிசையில், புத்திக எம்.பியின் ஆசனத்தில் சிறிதுநேரம் அமர்ந்திருந்தார்.
அவருக்கு அருகில் சென்ற அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி
எம்.பிக்கள் சிலர், அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
மத்திய வங்கியின் 2016ஆம் ஆண்டுக்கான அறிக்கை தொடர்பான விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று (10) இடம்பெற்றுகொண்டிருந்தது.
இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், அமைச்சர் ரவி கருணாநாயக்க, சபைக்குள் பிரவேசித்தார். ஆளும் தரப்பு எம்.பிகளும் பின்னாலேயே வந்தனர்.
வழமையைவிடவும் சபையின் இருபக்கங்களும் நிரம்பியிருந்தன. அமைச்சர் ரவி, தன்னுடைய ஆசனத்துக்கு வந்ததும், ஆளும் தரப்பைச் சேர்ந்த சிலர், அவருக்கு அருகில் சென்று தோள்களில், தட்டிக்கொடுத்தனர். இன்னும் சிலர் கைலாகு கொடுத்தனர்.
தனதுரையை 1:33க்கு ஆரம்பித்த அமைச்சர் ரவி, 1:45க்கு உரையை நிறைவு செய்தார். அவ்வப்போது, ஆளும் தரப்பினர், மேசைகளில் தட்டி வரவேற்றனர். ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த சிலர், வாக்குவாதப்பட்டதுடன், கிண்டலும் செய்தனர்.
தனதுரையை அவர் நிறைவு செய்தபோது, ஆளும் தரப்பைச்சேர்ந்த பலரும் எழுந்துநின்று மரியாதை செய்தனர். அதன்பின்னர், பின்வரிசைக்கு சென்ற ரவி எம்.பி, புத்திக பத்திரணவின் ஆசனத்தில் சிறிதுநேரம் அமர்ந்திருந்தார். அவரைக் குழுமிக்கொண்ட பலரும் அவருடன் செல்பி எடுத்துகொண்டனர்.
இந்நிலையில், பிற்பகல் 2மணியளவில், சபையை விட்டு வெளியேறிய ரவி எம்.பி, பத்தரமுல்லையில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு நேரடியாகச் சென்றார். அங்கு, குழுமியிருந்த ஆதரவாளர்கள், அவரை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவருடைய வீட்டுக்கு, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
2 hours ago
11 May 2025