Janu / 2026 பெப்ரவரி 18 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்காக, சிறைச்சாலை அதிகாரிகளால் அவர்கள் முகத்தை மூடிய நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட சாட்சியாளர் (முச்சக்கர வண்டி சாரதி) சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அடையாள அணிவகுப்பை ஒத்திவைத்து, சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடிக்க நீதவான் உத்தரவிட்டார்.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, ராஜகிரிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பியுமியின் மகனின் நண்பர் ஒருவர், முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். அந்தச் சம்பவத்தின் பின்னர் அங்கு வந்த பியுமியின் மகன் உள்ளிட்ட குழுவினர், முச்சக்கர வண்டி சாரதியைத் தாக்கியுள்ளமை தொடர்பாக வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபர்களுக்காக சட்டத்தரணிகளான அசினி உமயங்கனா மற்றும் இமாஷி சேனாதீர ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026