2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’பிரச்சினைகளைத் தீர்க்கத் தயார்’

Editorial   / 2019 ஜனவரி 18 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்தவொரு முயற்சிகளையும் முன்னெடுக்காத அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கத் தயாராகவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக, தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக்கத்தில் உரையாற்றும்  போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நான்கு வருடங்களுக்குப் பின்னர், நாட்டு மக்களுக்கு சேவை​ வழங்குவதற்காக, எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளதாகக் கூறிய அவர், இதுவரை காலமும், எதிர்க்கட்சித் தலைவர் பதவி, பிரதேச பிரச்சினைகளுகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்றும் ஆனால், இன்று முதல், வடக்கு, கிழக்கு, ​தெற்கு, மேற்கு, மலையகம் என, நாட்டின் சகல பகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனலும் செலுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சிங்கள, தமிழ், முஸ்லீம் பிரச்சினைகள் குறித்தும் தாம் அதிகக் கரிசனையுடன் செயற்படவுள்ளதாகவும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டி, மக்களுக்கு நியாயம் கிடைக்க, எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .