2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘பிரதமர் மஹிந்தவுக்கே ஆதரவு’

Editorial   / 2018 நவம்பர் 15 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில், தான் எடுத்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லையென, ஐக்கிய ​தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அசோக்க பிரியந்த புதிய பிரதமாக மஹிந்த நியமிக்கப்பட்டதும், மஹிந்தவுக்குக்கு ஆதரவு தெரிவித்தார்.

அத்துடன் புதிய அரசாங்கத்தில் அசோக்க பிரியந்தவுக்கு கலாசார அலுவல்கள் மற்றும் வடமத்திய மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, புதிய அரசாங்கத்தின் அமைச்சர், பிரதியமைச்சர் பதவிகளைப் பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், வசந்த சேனாநாயக்க ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகி, மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக்கொண்ட நிலையிலேயே, அசோக்க பிரியந்த இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .