Editorial / 2021 நவம்பர் 18 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
ஆனமடுவ, கொட்டுக்கச்சி, வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில் மேலும் 14 மாணவ பிக்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
மேற்படி பிரிவெனாவில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவ பிக்குகளுக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இப்பிரிவெனாவில் இம்மாதம் 1ஆம் திகதி 18 மாணவ பிக்குகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதுடன், கடந்த 10ஆம் திகதி மீண்டும் 13 மாணவ பிக்குகளுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான மாணவ பிக்குகளுக்கு தனித்தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அங்கு கல்வி பயிலும் மாணவ பிக்குகளுக்கு மீண்டும் 3ஆவது தடவையாக நேற்று (17) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போதே, 14 மாணவ பிக்குகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி ரவி அபேரத்ன தெரிவித்தார்.
சுமார் 65 மாணவ பிக்குகள் தங்கியிருந்து கல்வி பயிலும் வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில், 10 சிறுவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
23 minute ago
30 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
30 minute ago
3 hours ago