Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 12 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தூர்: மேகாலயாவில் தேனிலவு சென்ற போது கணவர் ராஜா கொல்லப்பட்ட விவகாரத்தில் கூலிப்படையினரிடம் இருந்து கணவர் தப்பினால் பிளான் பீ-யாக தான் வைத்திருந்த திட்டம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் ஒரு முக்கிய ட்விஸ்ட்டாக சோனம்தான் கொலை செய்தார் என்பதை பொலிஸ் விசாரணையில் ஒப்புக் கொண்டார். ஆசை ஆசையாக தேனிலவுக்கு சென்றார் ராஜா, எத்தனை கனவுகள் கண்டிருந்தாரோ தெரியவில்லை.
ஆனால் அவருடைய மனைவியே அவருக்கு எமனாக மாறுவார் என்பதை ராஜா சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். விருப்பமில்லாத திருமணத்தை ஏற்க மனமில்லாமல் சோனம், தனது காதலனை வைத்தே கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சோனம் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்திலிருந்தே தனது கணவரை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தன்னை எங்கேயோ கடத்தி சென்றதாகவே தெரிவித்து வந்தார். ஆனால் ஒரு வழியாக தனது கணவர் ராஜாவை கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், சோனம், தனது காதலன் ராஜ் குஷ்வாகாவுக்கு ரூ 50 ஆயிரம் கொடுத்து விஷால் சிங், ஆனந்த் குர்மி மற்றும் ஆகாஷ் ராஜ்புத் ஆகிய 3 பேருக்கும் ஷில்லாங்கிற்கு பயண ஏற்பாடு செய்தார்.
மேலும் தேனிலவு பயணத்தின் போது தன்னையும் ராஜாவின் நடமாட்டத்தையும் கண்காணிக்கும்படி அவர்களிடம் கேட்டுக் கொண்டாராம். ராஜாவுடன் திருமணம் முடிந்தும் காதலனுடன் சோனம் தொடர்பில் இருந்துள்ளார்.
மே 16ஆம் திகதி இந்தூரில் உள்ள ஓர் உணவகத்தில் ராஜ் தனது உறவினர் விஷால் சவுகான், அவரது நண்பர்கள் ஆகாஷ் ராஜ்புத், ஆனந்த் குர்மி ஆகியோருடன் கொலைத் திட்டம் குறித்து விவாதித்ததாக இந்தூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சவுகான், ராஜ்புத் மற்றும் குர்மி ஆகியோர் மே 17 அன்று ராஜ் ரூ 50 ஆயிரத்தை வழங்கிய பின்னர் மொபைல் போனுடன் மேகாலயாவுக்குச் சென்றனர். அதே நேரத்தில் ராஜ் குஷ்வாகா இந்தூரில் தங்கி சோனமின் சகோதரரின் தொழிற்சாலையில் தொடர்ந்து பணியாற்றினார்.
குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் மே 17 ஆம் திகதி 18 ஆம் தேதி வரை இந்தூரிலிருந்து டெல்லிக்கு ரயிலில் சென்று பின்னர் கவுஹாத்திக்கு ராஜதானி எக்ஸ்பிரஸில் ஏறினார்கள். ராஜாவும் சோனமும் மே 20ஆம் தேதி அன்று இந்தூரிலிருந்து ஷில்லாங்கிற்கு விமானத்தில் சென்றார்களாம்.
பயணத்தின் போதும் ராஜுடன் சோனம் தொடர்பில் இருந்தாராம். இதன் மூலம் தனது லொகேஷனை அவருக்கு சோனம் ஷேர் செய்தார். இதை வைத்துத்தான் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தேனிலவு சென்ற தம்பதியை தொடர்ந்து ஃபாலோ செய்தனராம்.
குற்றம்சாட்டப்பட்ட அந்த 3 பேரும் மே 23 ஆம் திகதி சுற்றுலா பயணிகள் போல் ராஜா, சோனத்துடன் மலையேற்றம் சென்றனர். அவர்கள் சுற்றுலா பயணிகள் அதிகம் இருக்கும் டபுள் டெக்கர் லிவிங் ரூட் பாலத்திலிருந்து விலகி, மிகவும் கரடுமுரடான பாதையைத் தேர்ந்தெடுத்து சென்றனர்.
ராஜா மே 23 அல்லது 24 ஆம் திகதி கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கிறார்கள். மலையேற்றத்தின் போது சோனம் வேண்டுமென்றே பின்தங்கி வந்தாராம். "அவரைக் கொல்லுங்கள்" கூச்சலிட்டு சிக்னல் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
அப்போதுதான் அந்த 3 பேரில் ஒருவர் ராஜாவை கூர்மையான ஆயுதங்களால் தாக்கினாராம். இதையடுத்து மற்ற இருவரும் தலை, உடற்பகுதியில் தாக்கினார்களாம். பின்னர் ராஜாவின் உடலை இழுத்துக் கொண்டு ஒரு பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டனர். பின்னர் கொலைக்கான ஆதாரங்களை அப்புறப்படுத்த சோனம் உதவி செய்துள்ளார். பின்னர் அனைவரும் தப்பி மத்திய பிரதேசம் சென்றுவிட்டனர்.
ஒரு வேளை கூலிப்படையினரால் கொல்ல முடியாவிட்டால் பிளான் பியை சோனம் வைத்திருந்தாராம். அதன்படி ராஜாவை அங்கிருக்கும் மலை உச்சியில் இருந்து தள்ளிவிட திட்டமிட்டிருந்தாராம். இவ்வாறு பொலிஸார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago