2025 ஜூலை 07, திங்கட்கிழமை

புகைப்படம் எடுத்தவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை

Editorial   / 2019 ஜனவரி 23 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பல்கலைக்கழக மாணவர் குழுவை, கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஹொரவபொத்தான பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த புகைப்படத்திலிருந்த ஏழு பேரில் நான்கு பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மற்றைய மூன்று பேர் தொடர்பில் தகவல்கள் ஏதும் கிடைக்கபெறாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க குறித்த தூபியின் மீதேறி, அதனை அவமதிப்புக்குள்ளாக்கியதாக தெரிவித்து, கிரலாகல இடத்துக்கு பொறுப்பான தொல்பொருள் அதிகாரிகள், ஹொரவபொத்தான பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .