Mayu / 2024 ஒக்டோபர் 13 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜார்கண்ட் மாநிலத்தில் கணவர் புதிய புடவை வாங்கி தராததால் அதிருப்தியடைந்த இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிர் மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தும்கா மாவட்டத்தில் உள்ள பாக்ஜோபா கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய செந்தோ தேவியின் கணவர் டிராக்டர் சாரதியாக உள்ளார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தசராவை முன்னிட்டு செந்தோ தேவி, தன்னுடைய கணவரிடம் புதிய புடவை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரால் சேலை வாங்கி தர முடியவில்லை.
இந்த நிலையில் கணவர் சேலை வாங்கி தராததால் அதிருப்தியடைந்த செந்தோ தேவி சனிக்கிழமை (12) அன்று, ரயில் முன் பாய்ந்து உயிர்மாய்த்து கொண்ட நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
45 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
4 hours ago