Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 16 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்தாண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் காணப்பட்ட தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்கள், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக கடமையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகப்பூர்வ வாகனங்கள் மற்றும் வீடுகளை இருவரை மீண்டும் உரியவர்களிடம் கையளிக்கவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தமது வீடுகள் மற்றும் வாகனங்களைக் கையளிக்காமைக் காரணமாக, புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு வீடுகள், வாகனங்களை வழங்குவதில் அரசாங்கம் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதென, அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகி 3 மாதம் செல்லும் வரை அமைச்சர்களுக்குரிய வீடுகள், வாகனங்களைப் பயன்படுத்த முடியுமெனவும் இதற்கான சகல உரிமையும் அவர்களுக்கு உண்டென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago