Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 18 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சி.அமிர்தப்பிரியா
சுதந்திரக்குப் பின்னர், அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் யாவும், பிரதான கட்சிகளின் ஆட்சியிருப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன எனக் குற்றஞ்சாட்டிய சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் செயலாளர் பாலித லிஹினிய குமார, புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக, சகலரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென வலியுறுத்தினார்.
புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான பலம், நாடாளுமன்றத்தில் இந்த அரசாங்கத்துக்கு இல்லையென மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றாரெனக் குறிப்பிட்ட அவர், அப்படியாயின் அந்த அதிகாரம் எந்த அரசாங்கத்துக்கு இருக்கிறதென வினவினார்.
இராஜகிரியவில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், ஆளும் கட்சியில் இருப்பவர்கள் தங்களுடைய அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளும் அதேநேரத்தில், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர் என்றார்.
புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான பணிகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிவரும் ஒத்துழைப்பை பாராட்டிய அவர், கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல் உடனடியாக, அதுவும் ஒரே தடவையில் நடத்தவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago