Editorial / 2019 ஜூலை 21 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான, புதிய கூட்டணி ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி மக்களைச் சந்திக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமது கூட்டணியின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதெனவும், கூட்டமைப்பின் யாப்புக்கான வேலையும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தற்போது கூட்டமைப்பின் இலட்சனை குறித்தும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து, ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி காலை 10 மணிக்கு, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் பொதுமக்களைச் சந்திப்பர் என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.
11 minute ago
31 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
38 minute ago
2 hours ago