2025 ஜூலை 05, சனிக்கிழமை

புதிய கூட்டமைப்பு: நேற்றிரவு கலந்துரையாடல்

Editorial   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன கூட்டணியின் புதிய அரசியல் கூட்டமைப்பு தொடர்பில், நேற்று (06) இரவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில், விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர, தினேஸ் குணவர்தன, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, ஏ.எல்.எம், அதாவுல்லா, டக்ளஸ் தேவானந்தா, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்ததாக தெரியவருகின்றது.

புதிய அரசியல் கூட்டமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பில், பொதுஜன பெரமுனவால் டளஸ் அழகப்பெரும தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரும் அடங்குவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர், ஜனாதிபதியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், எதிர்வரும் 16 அல்லது 17ஆம் திகதிகளில் மீண்டும் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .