Editorial / 2019 ஜூலை 25 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நாயகமொருவர் நேற்று (24) தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சு இது தொடர்பில் கோரிக்கை எதனையும் விடுக்காத நிலையில், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அறிவிக்கப்படாமல், அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர், புதிய திட்டமிடல் பணிப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளராக செயற்பட்டவர் தனது கடமைகளைச் சரிவர செய்து வருபவரென்பதுடன் திட்டமிடல், முகாமைத்துவம் தொடர்பான உயரிய அனுபவங்களைக் கொண்ட அதிகாரியான அவரை நீக்கிவிட்டு, புதிய அதிகாரியொருவரை நியமிப்பது தேவையற்ற ஒன்றெனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய பணிப்பாளரை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள அவர், அவரது நியமனத்துக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
21 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago