2025 ஜூலை 10, வியாழக்கிழமை

புதிய பிரதியமைச்சரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

Editorial   / 2018 நவம்பர் 05 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசாங்கத்தின்  கலாசார உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சராக, நேற்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க பிரியந்தவின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு மாரவில பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நேற்று மாலை பிரதியமைச்சராக அசோக்க பிரியந்த பதவியேற்ற பின்னர், நாத்தாண்டியா- மரத பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு முன்பாக வந்த சிலர் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து பிரதியமைச்சர் அசோக்க பிரியந்தவின் வீட்டுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேசத்தில் பொலிஸ் ரோந்து சேவையொன்றையும் முன்னெடுக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாரவில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .