2026 மே 14, வியாழக்கிழமை

புதிய வாகனங்களை வாங்க புது எம்.பிக்களுக்கு வாய்ப்பு

Niroshini   / 2021 மே 25 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள புதிய எம்.பிக்கள், தவணைக் கொடுப்பனவு முறையின் கீழ் புதிய வாகனங்களை இறக்குமதி செய்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்குவது தொடர்பில், அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

வரி விலக்கு அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்வதான அனுமதி அட்டைகளைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் நடைமுறை, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, அரசாங்கம் இந்தப் புதிய நடைமுறையைப் பின்பற்றுவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள புதிய எம்.பிக்கள், தவணைக் கொடுப்பனவு முறைமையின் கீழ் ஜீப் வண்டிகளை இறக்குமதி செய்வதற்கு வழிசமைத்துக் கொடுக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் விடயதானக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான வாகனத் தேவைகளை வலியுறுத்தி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால், ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தப் புதிய யோசனை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தின் அவசர வாகனத் தேவையின் நிமித்தம், 50 அம்பியூலன்ஸ்கள், 50 டபள் கெப் ரக வாகனங்கள் மற்றும் 50 பவுஸர் வண்டிகளைக் கொள்வனவு செய்யவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .