Editorial / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைப்பது தொடர்பிலான தீர்மானத்தை வழங்குவதற்கு, அரசாங்கம் தாமதிக்கும் பட்சத்தில், இலங்கை மீது சர்வதேசத்தின் அநாவசியமான கெடுபிடிகளுக்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
ஐ.தே.க, மகா சங்கத்தினருக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில், மகா சங்கத்தினர், கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை தெளிவூட்டும் வகையில் அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் விவகாரத்தில், விரைவாகத் தீர்வொன்றை எட்டுவதற்கு, மகாசங்கத்தினரின் தலையீடு அவசியமாகும் எனத் தெரிவித்துள்ள ஐ.தே.க, கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் மகா சங்கத்தினருக்கு அறிவுறுத்தல் தொடர்பான யோசனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மேற்படி கூட்டத்தில், சகல மதங்களினதும் தலைவர்களுடன் பேச்சுகளை நடத்தியே, இந்த விவகாரத்தில் தீர்மானம் எடுக்க வேண்டுமென ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவுரை வழங்கியுள்ளார். சகல இன, மதங்களுக்குமான அந்தஸ்துகளையும் சரியான வகையில் பெற்றுக்கொடுக்கும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, மேற்படி விடயத்தை ஆழமாகப் பார்க்கின்றது எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல்இ மேற்படி சடலங்களை புதைப்பது தொடர்பான விடயத்தை, எவரும் இனவாத நோக்கங்களுக்காகக் கையிலெடுப்பதற்கு இடமளிக்கக் கூடாதெனக் குறிப்பிட்டுள்ள அக்கட்சி, மதத் தலைவர்களுடன்இ சுகாதார அதிகாரிகளையும் அழைத்துக் கலந்துரையாடி, சரியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டியது அவசியமென அக்கட்சி வலியுறுத்தி உள்ளது.
39 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago