R.Tharaniya / 2025 ஜூன் 19 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை- மூதூர் 3ம்கட்டைமலைபுத்தர் சிலை விவகாரத்தால் விகாராதிபதியின் முறைப்பாட்டில் கைதான இளைஞனுக்கு புதன்கிழமை (18) அன்று பிணை வழங்கப்பட்டது.
மூதூர் 3ம் கட்டை மலை விகாராதிபதி, அ.ரமேஷ் என்பவருக்கு எதிராக மூதூர் பொலிஸில் செய்த முறைப்பாடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு புதன்கிழமை (18) மூதூர் நீதான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்..
ரமேஷ் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி துஷ்யந்தன் மற்றும் சட்டத்தரணி முகுந்தன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். குறித்த காணிக்கு அரசினால் வழங்கப்பட்ட காணி உறுதி இருக்கிறது என சட்டத்தரணி துஷ்யந்தன், நீதிமன்றுக்கு அறிவித்தார்.
2015 காலப்பகுதியில் ஆயுதப்படையினர் பலாத்காரமாக முகாம் அமைத்து அதில் சிறிய புத்தர் சிலையை வைத்து வழிபட்டனர். பின் அவர்கள் அங்கிருந்து 2020ல் வெளியேறும் போது பிறகு வந்து அச்சிலையை எடுத்து செல்வதாக கூறி சென்றனர் .
ஆனால், இன்று வரை அது எடுக்கப்படாததால் அந்த இடத்தில் ரமேஷ், புத்தர் சிலையுடன் பிள்ளையார் சிலை வைத்து கடந்த 4 வருடம் வழிபாடு செய்தார் . கடந்த பொசன் போயா தினத்தன்று விகாராதிபதி வந்து பிள்ளையார் சிலையை அகற்ற முயன்றார்.
ரமேஷ் எதிர்த்ததால் அவரை கைது செய்யுமாறு பொலிஸில் விகாராதிபதி முறைப்பாடு செய்தார்.இது மத சுதந்திரத்தை மீறும் செயல்.இன முறுகலை ஏற்படுத்திய செயல்.எனவே, அவரை விடுவிக்க வேண்டும் என கோரினார்.

அ . அச்சுதன்
43 minute ago
47 minute ago
56 minute ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago
56 minute ago
13 Mar 2026