Freelancer / 2023 ஜனவரி 14 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்த புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சனிக்கிழமை(14) மதியம் 12.20 மணியளவில் கையெழுத்திடப்பட்டது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எனும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் புதிய கூட்டணியானது போட்டியிடவுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
கூட்டணி ஒப்பந்தத்தில் புளொட் சார்பாக த.சித்தார்த்தனும் ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதனும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய கட்சி சார்பாக என்.ஸ்ரீகாந்தாவும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தனும் கையெழுத்திட்டனர்.
புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை(13) இடம்பெற்ற கட்சிகளின் தலைவர்களால் எட்டப்பட்ட முடிவுக்கமைய ஒப்பந்தம் கைச்சாத்தானது.
சின்னம் தொடர்பில் இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் நேற்றைய கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
தமிழ் மக்கள் கூட்டணியை இணைக்க சமசர முயற்சிகள் மேற்கொண்டபோதும் பலனளிக்காத நிலையில் மீதமிருந்த ஏனைய கட்சிகள் உடன்பாட்டுக்கு வந்து கூட்டணி அமைக்க தீர்மானம் எடுத்தன.
18 minute ago
32 minute ago
40 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
32 minute ago
40 minute ago
59 minute ago