2025 ஜூலை 16, புதன்கிழமை

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு திகதி அறிவிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 06 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று (5) வெளியிடப்பட்டுள்ள 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்  பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விரும்புபவர்கள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்பதாக தமது மேன்முறையீட்டு விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளத

குறித்த விண்ணப்பங்கள் பாடசாலை அதிபர் ஊடாக அனுப்பி வைக்கப்படல் வேண்டுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்கள் பரீட்சை பெறுபேறுகளுடன் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பரீட்சைகள் திணைக்களம், மேலதிக தகவல்களை 1911 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது பாடசாலை பரீட்சைகள் அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளை அலுவலகத்தின் 0112-784208, 784537, 0113188350, 0113140314 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் எனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .