Freelancer / 2022 டிசெம்பர் 17 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை (18) 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான சகல ஏற்பாடுகளும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்தார்.
பகுதி இரண்டு வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும். பாடப் புத்தகங்களிலுள்ள விடயங்கள் அடங்கிய பகுதி 2 வினாப்பத்திரத்தை முதலில் வழங்குமாறு பெற்றோர்களால் கோரப்பட்டிருந்தது.
இதற்கமைய, பகுதி இரண்டு வினாப்பத்திரம் முற்பகல் 9.30 அளவில் வழங்கப்பட்டு, 10.45 அளவில் நிறைவுச் செய்யப்படும்.
அதில் 60 வினாக்கள் அடங்குகின்றன. பின்னர் 40 வினாக்கள் அடங்கிய பகுதி ஒன்று வினாப்பத்திரம், முற்பகல் 11.15க்கு வழங்கப்பட்டு மதியம் 12.15க்கு நிறைவு செய்யப்படும்.
இந்த முறை அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக வரவுப் பதிவேடு முறை கையாளப்படும்.
பரீட்சை நிலையங்களுக்கு பெற்றோர்கள், பாதுகாவலர்கள் செல்ல முடியாது. பரீட்சார்த்திகளை பாடசாலை ஆசிரியர்களே அழைத்து செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். R
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago