2025 ஜூலை 16, புதன்கிழமை

’புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்காக பிள்ளைகளை தொந்தரவு செய்ய வேண்டாம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரேயொரு தடை தாண்டல் பரீட்சை என்று பெற்றோர்கள் நம்புகின்ற காரணத்தினால், நாட்டின் சிறுவர் தலைமுறை பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தாலும் சித்தியடையாவிட்டாலும் தொந்தரவுகளின்றி பிள்ளைகளை அரவணைப்பது எவ்வாறு என்பது பற்றி ஒவ்வொரு வருடமும் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பெற்றோர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்றை தயார்படுத்துமாறு அனைத்து அதிபர்களுக்கும் ஆலோசனை வழங்கினார்.

கண்டி முன்மாதிரி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று (06) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளைத் தொடர்ந்து கடந்த காலங்களில் நாட்டின் பிள்ளைகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இது பற்றி அனைத்து கல்வித்துறை அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .