Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2018 மார்ச் 21 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
முழு நாட்டிலும் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற பேரழிவுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே பொறுப்புக் கூறவேண்டுமெனக் கூறிய, நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், உலகத்திலேயே “நம்பவர் வன்” பயங்கரவாத இயக்கமெனக் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களின் எண்ணிக்கை, 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர், எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்டவை உள்ளிட்ட கேள்விகளை, உள்நாட்டலுவல்கள் அமைச்சரிடம் கேட்டிருந்தார்.
கேள்விகளுக்குப் பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க, மொத்தமாக 1,046 நிறுவனங்கள் இருந்தன. அதில், 104 நிறுவனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அன்றைய காலத்திலிருந்த நெருக்கடியான நிலைமை மற்றும் சிவில் நிர்வாகம் சீர்குலைந்திருந்தமையால், இழப்பீடுகளை மதிப்பிடமுடியவில்லையெனப் பதிலளித்தார்.
இதன்போது, குறுக்குக் கேள்வியெழுப்பிய பத்ம உதயசாந்த குணசேகர எம்.பி, “உலகிலேயே நம்பவர் வன் பயங்கரவாத இயக்கமே, புலிகள் இயக்கமாகும். அந்த இயக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இழப்பீடுகளை அரசாங்கங்கள் மதிப்பீடு செய்திருக்கவேண்டும். ஆனால், எந்தவொரு அரசாங்கமும் அதனைச் செய்யவில்லை” என்றார்.
“கடந்த 30 வருடங்களில் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட இழப்புகளுக்கு, புலிகளே பொறுப்புக் கூறவேண்டும். எனினும், இராணுவத்தினர் மனித உரிமைகளை மீறிவிட்டனரென, ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
“எனினும், வடக்கு மற்றும் கிழக்கில் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கை, பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. அவற்றை வைத்து, எந்தவொரு அரசாங்கமும் மதிப்பீடு செய்யவில்லை” என்றார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago