2025 ஜூலை 16, புதன்கிழமை

பூஸா முகாமிலிருந்து 11 பேர் வெளியேறினர்

Editorial   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூஸா கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல மத்திய நிலையத்தில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 11 பேர், தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று (16) வீடு திரும்பியுள்ளனர்.

குறித்த நபர்கள் அனைவரையும் பீ.சீ.ஆர் சோதனை மேற்கொண்டதன் பின்னரே, வீடுகளுக்குச் செல்ல அனுமதித்துள்ளனர்.  அத்துடன், தனிமைப்படுத்தலை நிறைவு செய்தமைக்காக அவர்களுக்கு கடற்படையினரால் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

பூஸா தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து இதுவரை 68 பேர் வெளியேறியுள்ளதுடன், மேலும் 31 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனரென, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.   

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .