Editorial / 2025 ஜூலை 11 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருப்பதை மறைந்திருந்து பார்த்தமையால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், நபர் ஒருவர் மீது அமிலத் (ஆசிட் வீசி) தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஒரு ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிட் வீச்சுக்கு இலக்காகி காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஜோடி, மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவர்களை ஜூலை 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த 8 ஆம் திகதி இரவு 7.05 மணியளவில் நடந்த ஆசிட் வீச்சு தாக்குதலில் காயமடைந்தவர், களுத்துறை நாகொட போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அமிலத் தாக்குதலுக்கு உள்ளான நபரின் மகன், பக்கத்துக்கு வீட்டு பெண் குளிப்பதை, ஜன்னல் ஊடாக எட்டி எட்டி பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை அடுத்தே, ஆசிட் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என நீதிமன்றத்தின் கவனத்திற்கு பொலிஸார் கொண்டுவந்துள்ளனர்.
ஆசிட் வீச்சுக்கு பிறகு, பாதிக்கப்பட்டவர் தனது முகத்தையும் மார்பையும் தண்ணீர் குழாயில் கழுவிவிட்டு, இரவு 12.20 மணியளவில் சந்தேக நபர்களின் வீட்டிற்குச் சென்று, என் மீது ஏன் ஆசிட் வீசினீர்கள் என்று கேட்டுள்ளார். நள்ளிரவு 12.20 மணியளவில் சந்தேக நபர்களின் வீட்டிற்குச் சென்றபோது, மீண்டும் அவர் மீது ஆசிட் வீசித் தாக்கியுள்ளனர்.
24 minute ago
37 minute ago
46 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
37 minute ago
46 minute ago
53 minute ago