2025 ஜூலை 05, சனிக்கிழமை

பேராதனை பல்க​லைக்கழகத்தில் பகடிவதை மாணவியொருவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 05 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனை பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகடிவதைத் தொடர்பில் 2 விசாரணைனகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் ஊடாகவும்  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைபாட்டுக்கு அமைய பேராதனை பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவியொருவரால் தாக்குதலுக்கு இலக்கான மாணவிகள் மூவர் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவி ​நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .