Janu / 2024 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுராதபுரம் - பாதெனிய பிரதான வீதியில் ஸ்ராவஸ்திபுர சந்திக்கு அருகில் சிசு செரிய பேருந்தொன்றுடன் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்தொன்று மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு மாணவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர் .
ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து , ஸ்ராவஸ்திபுர சந்திக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிசு செரிய பேருந்தின் பின்புறம் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது .
காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026